நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2513
Zoom In NormalZoom Out


 

கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாண் மயிர்”         (திணை.நூற்.4)

“பெறுவ தியையா தாயினு முறுவதொன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
கைவள ரோரி கானந் தீண்டி
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்
மையீ ரோதி மாஅ யோள்வயி
னின்றை யன்ன நட்பி னிந்நோ
யிறுமுறை யெனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே.”        (குறுந்.199)

“நோயு நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே
யென்னுள் வருதியோ வெழினடைக் கொடிச்சி
முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின்
உருவுகண் ணெறிப்ப நோக்கலாற் றலனே
போகிய நாகப் போக்கருங் கவலைச்
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறா டிரும்புற நீறொடு சிவண
வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்பழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே”           (நற்.82)

“மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் - குயில்பயிலும்
கன்னி யிளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்துமென் னெஞ்சு.”        (திணை.ஐம்.49)

என வரும்.

அன்பு உற்று  நகினும் -  தோழி  குறைமறுப்புழி  அன்பு  தோன்ற
நகினும்:

உ-ம்:

“நயனின் மையிற் பயனிது வென்னாது
பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப்
பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது
தகாஅது வாழியோ குறுமக ணகாஅது
உரைமதி உடையுமென் னுள்ளம் சாரற்
கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த ஆயிழை மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்றவென்
பைத னெஞ்சம் உய்யு மாறே.”                 (நற்.75)

இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது.

அவட்  பெற்று  மலியினும் -  தோழி  உடம்பாடு  பெற்று  மனம்
மகிழினும்.

உ-ம்:

“எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே.”  (ஐங்குறு.175)

இஃது அவட்பெற்று மலிந்து தலைவன் கூறியது.

இன்னும் ‘அவட்பெற்று மலியினும்’ என்றதற்கு, இரட்டுற மொழித
லென்றதனாற்,  றலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்று
மகிழினும் என்று பொருளுரைக்க.

“நன்றே செய்த வுதவி நன்றுதெரிந்து
யாமென் செய்குவம் நெஞ்சே காமர்
மெல்லியல் கொடிச்சி காப்பப்
பல்குரல் ஏனற் பாத்தருங் கிளியே.”        (ஐங்குறு.288)

இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கட் படிகின்ற