|
கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது.
இனி, யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப் பொருள் வரையறைபற்றி முறை சிறந்து வருதலும் பெயர்கொளப் பெறாமையும் உடையவன்றே, அவ்வாறன்றி, ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையு மாயின் அவ்வந்நிலத்தியல்பானும் பிறபாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள் வழி அவ்வந்நிமித்தங்களும் வேறு வேறாகி வரும் பாங்கன் நிமித்தங்களையுடைய எனப்பட்டன.
இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறு
படுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போலா இவை யென்பதூஉம், அவ்வந்நிலத்தின் மக்கட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ்வாற்றான் எண் வகை மணனும் உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும் போல அகப்புறமெனப்படுமென்பதூஉங் கொள்க.
இனி, ஆசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர் நீயுஞ்
சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைநின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்தமுடைத்து. இராக்கதத்திற்கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து. பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப்பின் அதற்கும் அது நிமித்தமாம். இப் பன்னிரண்டுந் தொன்மையுந் தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன. (13)
பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழும்
இன்னதிணைப்பாற்படுமெனல்
105. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழனை
எழுதிணையுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது.
(இ-ள்.)
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - இதற்கு முன் நின்ற ஆசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்தில வேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே - பின்னர் நின்ற பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வமென்னும்
|