நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2517
Zoom In NormalZoom Out


 

நான்கனையும்  பெருந்திணை  தனக்கு  இயல்பாகவே  பெறுமெனவுங்
கூறப்படும் எ-று.

மன்றல்  எட்டு  என்ற  வரலாற்று  முறையானே  ‘வாளாது பன்னி
ரண்டென்றார்’    என்பதே    பற்றி,    ஈண்டும்    அம்முறையானே
இடவகையான்  ‘முன்னைய  மூன்றும்’  ‘பின்னர்  நான்கு’  மென்றார்.
எனவே, இனிக் கூறும் ‘யாழோர்  மேன’ (தொல்.பொ.106)  ஐந்தும்
ஒன்றாக     அவ்விரண்டற்கும்     இடையதெனப்     படுவதாயிற்று.
வில்லேற்றியாயினுங்  கொல்லேறு  தழீஇயாயினுங்  கொள்வ லென்னும்
உள்ளத்தனாவான்  தலைவனே  யாதலின்,  அதனை  முற்படப்பிறந்த
அன்பு  முறைபற்றி  ஒருதலைக்  காம  மாகிய ‘கைக்கிளை’ யென்றார்.
இராக்கதம்  வலிதின்  மணஞ்செய்தலாதலின்  அதுவும் அப்பாற்படும்:
பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாயவாறு.
‘காமஞ்சாலா  இளமையோள்  வயிற்’ (தொல்.பொ.50)  கைக்கிளை
சிறப்புடைத் தென்றற்குப் ‘புல்லித் தோன்றும்’ (தொல்.பொ.50) எனக்
கூறி,  இதனை  வாளாது  ‘குறிப்’பென்றார். ஆண்டுப் பிற்காலத்தன்றிக்
காட்சிக்கண்  மணம்  அதற்கின்மையின்  ஈண்டு  மணங்  கூறும்வழிக்
கூறாது     அகத்திணையியலுட்     கூறினார்.    ‘ஏறிய    மடன்மா’
முதலியவற்றைப்  ‘பெருந்திணைக் குறிப்பே’ (தொல்.பொ.51) எனக்
கூறி,  ஈண்டுப்  ‘பெருந்திணை  பெறுமே’  யென்றார், அவை சிறப்பில
இவை சிறப்புடைய வென்றற்கு.

இந்  நான்கும்  ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோ
டொருத்தியை     எதிர்நிறீஇ     அவருடம்பாட்டோடு    புணர்க்குங்
கந்தருவமன்மையானும் அவற்றின் வேறாகிய பெருந்திணையாம்.    (14)

பன்னிரண்டனுள் இடையதாய ஐந்தும் இவையெனல்

106. முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.

இஃது  அப்  பன்னிரண்டனுள்   இடையதாய்   ஒழிந்த   ஐந்துங்
கூறுகின்றது.

(இ-ள்.)    முதலொடு   புணர்ந்த   யாழோர்   மேன-மேற்கூறிய
நடுவணைந்திணையுந்  தமக்கு  முதலாக  அவற்றொடு பொருந்திவருங்
கந்தருவமார்க்கம்  ஐந்தும்;  தவலருஞ்  சிறப்பின் ஐந்நிலம் பெறுமே -
கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை
ஐந்தெனப்படும் எ-று.

எனவே,   முதற்கந்தருவம்  ஐந்துமேயன்றி அவற்றொடு பொருத்த
முடைய  கந்தருவம்  இவ்வைந்துமென  வேறுபடுத்தினார். இவை அப்
பன்னிரண்டனுட்   கூறாநின்ற  ஐந்தும்,  முதலொடு  புணர்ந்தவென்றே
ஒழியாது பின்னும் ‘யாழோர் மேன’ வென்றார், இவையுங்