நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2519
Zoom In NormalZoom Out


 

தல் வேட்கையான் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக”   (கலி.46)

“இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக்
கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல்
எம்மினு முயவுதி செந்தலை யன்றில்
கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ
நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே.”

இது தன்னுட் கையாறெய்திடு கிளவி.

“புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்
துன்ப முழவாய் துயிலப் பெறுதியால்
இன் கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ”
                                (சிலப்.கானல்வரி.33)

எனவும்  இவை  குறிபிழைத்துழித்  தன்வயி னுரிமையும் அவன் வயிற்
பரத்தைமையும்  படக்  கூறியனவாம். குறிபிழைத்தலாவது புனலொலிப்
படுத்தலும்   புள்ளெடுப்புதலும்   முதலியன.  குறியெனக்  குறித்தவழி,
அவனானன்றி  அவை  வேறொரு காரணத்தான் நிகழ்ந்துழி, அதனைக்
குறியென  நினைந்து சென்று  அவை அவன்குறி யன்மையின் அகன்று
மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க.

காணா  வகையிற்  பொழுது  நனி இகப்பினும் - குறிவழிச் செல்லுந்
தலைவனை       இற்றைஞான்றிற்       காண்டல்      அரிதென்று
கையறுவதோராற்றாற் பொழுது சேட்கழியினும்:

என்றது,     தாய்துஞ்சாமை,   ஊர்துஞ்சாமை,   காவலர் கடுகுதல்,
நிலவுவெளிப்படுதல்,   நாய்துஞ்சாமை   போல்வனவற்றான்  தலைவன்
குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம்.

உ-ம்:

“இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
மல்ல லாவண மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிகோள் அருஞ்சிறை யன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்
பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருண் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத்து அழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குர லியம்பும்
எல்லா மடிந்த காலை யொருநாள்
நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே
அதனால், அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந்து
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றால் தோழிநங்