நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2523
Zoom In NormalZoom Out


 

தலைவற்குத்    தலைவிதமர்    வரை   வுடம்பட்டதனைத்   தலைவி
விரும்புதலையும்:

உ-ம்:

“இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும்
மலையக நாடனும் வந்தான்மற் றன்னை
அலையு மலைபோயிற் றின்று.”         (ஐந்திணை.எழு.3)

“ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மாந்தை அன்னவெங்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே.”       (குறுந்.34)

தமரான்  ஒறுக்கப்பட்டு   ஓவாராய்த்   துயருழத்தல்   ஆகாதென
ஆற்றுவிக்குஞ்  சொற்களான்   மறுத்துரைப்பவுந்  தேறாராய்த் தனித்து
இருப்பார்  உறக்கம்  காரணமாக  எழுந்த  கௌவை  கேளாது வரைந்
தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்.

ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ அவன்
வரைவு  வேண்டினவிடத்து  அவ்வரைவு  புறத்ததாகியவழித்  தலைவி
தன்னுயர்பு  உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறியவற்றைத்
தொகுத்து.

‘அதன்புறம்’ எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று.
தலைவி   தன்   குடிப்பிறப்புங்  கற்பும்  முதலிய  உயர்ச்சிக்கு  ஏற்ப
அதனை  மறுத்துத்  தலைவன்  வரையுமாறு  நீ கூறெனத் தோழிக்குக்
கூறுமென்றற்குப், ‘புரைபட வந்த மறுத்தல்’ என்றார்.

“வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த
வோரிப் புதல்வ னழுதன னென்பவோ
புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால்
வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா
வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ
தோழி யவனுழைச் சென்று;
சென்றியா னறிவேன் கூறுக மற்றினி;
சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா
நினக்கொரூஉ மற்றென் றகலகலு நீடின்று
நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு;
தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி
யெருமைப் பெடையோ டெமரீங் கயரும்
பெருமண மெல்லாந் தனித்தே யொழிய
வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முட் புணர்ந்த
வொருமணந் தானறியு மாயின் எனைத்தும்
தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த
விரிநீ ருடுக்கை உலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணங் கூடுத லில்லியல் பன்றே”           (கலி.114)

என வரும்.

“மள்ளர் குழீஇய விழவி னானும்”              (குறுந்.31)

என்பதுமாம்.

இச்சூத்திரத்து  உருபும்  எச்சமுமாயவற்றைக்   ‘கிழவோண்  மேன’
என்பதனொடு   முடித்து,   முற்றிற்குக்   கிளவியென   ஒரு   பெயர்
வெளிப்படுத்து   முடிக்க.   புல்லிய   எதிரையும்   உடன்படுதலையும்
மறுத்தலுட்   தொகுத்து.   கிழவோள்  மேன  என்மனார்  புலவர்  -
தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு.       (16)

காமப்புணர்ச்சிக்கண்நாணுமடனும்
குறிப்பினுமிடத்தினும் வருமெனல்

108. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்