நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2524
Zoom In NormalZoom Out


 

நாணும் மடனும் பெண்மைய வாதலின்
குறிப்பினும் இடத்தினு மல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயி னான.

இஃது   உள்ளப்புணர்ச்சிக்கு   உரியவாறு   மெய்யுறு  புணர்ச்சிக்
கண்ணும்   நிகழுமென்ற  நாணும்  மடனுங்  குறிப்பினும்  இடத்தினும்
வருமெனக்     கூறுதலின்,   ‘அச்சமு  நாணும்’   (தொல்.பொ.99)
என்பதற்குப்   புறநடையாயிற்று.    இதனை    ஈண்டுக்    கூறினான்,
இடத்தின்கண்     வரும்      நாணும்     மடனுந்      தந்தன்மை
திரிந்துவருமென்  தூஉம்,   அது   கூற்றின்கண்    வருமென்பதூஉங்
கூற்றுநிகழ்கின்ற    இவ்விடத்தே   கூறவேண்டுதலின்.  எனவே,  இது
முதலிய   சூத்திரம்    மூன்றும்   முன்னர்த்   தலைவிக்குக்   கூற்று
நிகழு  மென்றற்குக்,  கூற்றுநிகழுங்கால்  நாணும்   மடனும்    நீங்கக்
கூறும்    என்று   அக்கூற்றிற்கு   இலக்கணங் கூறினவேயாயிற்று.

(இ-ள்.) அவள்வயின்  ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
-  தலைவியிடத்து  உளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே
தோன்றுதலையுடையவாதலின்;      காமத்திணையிற்      கண்ணின்று
குறிப்பினும்  வரூஉம்  -  அப்பருவத்தே  தோன்றிய  காமவொழுக்கங்
காரணமாக  அவை  கண்ணின்கணின்று  குறிப்பினும்  வரும்; வேட்கை
நெறிப்பட   இடத்தினும்  வரூஉம்  -  அன்றி  வேட்கை  தன்றன்மை
திரியாது  வழிப்படுதலானே  கரும நிகழ்ச்சிக்கண்ணும்  வரும்; அல்லது
வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா எ-று.

இயற்கைப்  புணர்ச்சிக்கண்   உரியவாகக்    கூறும்   பன்னிரண்டு
மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்தவாறுணர்க.

“ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங்
கரும நிகழ்ச்சி யிடமென மொழிப”   (தொல்.பொ.செய்.198)

என்னுஞ்   செய்யுளியற்   சூத்திரத்தான்   இடமென்றதனைக்   கரும
நிகழ்ச்சி என்றுணர்க:

அஃதாவது  இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலுந் - தோழியிற்
புணர்வுமாம்.  இவற்றின்கண்ணும்  நாணும்  மடனும்  நிகழுமென்றான்.
இனித்  தோழியிற்  புணர்வின்கண்  வரும் நாணும் மடனுந்தந்தன்மை
திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான்.            (17)

கரும நிகழ்ச்சிக்கண் நாணும் மடனுந் தந்தன்மை
திரிந்து வருமெனல்

109. காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்
ஏமுற விரண்டும் உளவென மொழிப.

இது  கருமநிகழ்ச்சிக்கண்  வரும்  நாணும்   மடனுந்   தந்தன்மை
திரிந்துவரு மென்கின்றது.

(இ-ள்.)  சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக்
கூற்று  நிகழாத  காமம்  புலனெறி  வழக்கின்கணின்மையின்; இரண்டும்
ஏமுற  நாட்டம்  உளவென  மொழிப  -  முற்கூறிய  நாணும் மடனுந்
தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் எ-று.

என்றது,  தோழியிற்   கூட்டத்துத்   தலைவி   கூற்று  நிகழ்த்துவ
ளென்பதூஉம்,  நிகழுங்கால்  நாணும் மடனும்  பெரும்பான்மை கெட்டு
அக்கூற்று  நிகழுமென்பதூஉம், அங்ஙனங்கெடுதலையும்  முந்துநூற்கண்
ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று.

“தேரே முற்றன்று