|
‘இன்னளாயின’ளென்றது தற்காட்டுறுதல், ‘செப்புநர்ப் பெறினே’
யென்பதனாற் களவாயிற்று; கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள.
நிறைந்த காதலிற் சொல் எதிர்மழுங்கல் - தலைவி காதல்
மிகுதியான் தலைவன் பரத்தைமையை எதிர்கூற நினைந்து
கூற்றெய்தாது குறைபடுதற்கண்ணும்.
உ-ம்:
“பிறைவனப் பிறந்த நுதலும் யாழநின்
இறைவரை நில்லா வளையு மறையாது
ஊரலர் தூற்றுங் கௌவையு முள்ளி
நாண்விட்டுரையவற் குரையா மாயினு மிரை வேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது
கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முடமுதிர் நாரை கடன்மீ னொய்யு
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவுங் காப்பவுங் கைம்மிக்
குரைத்த தோழி யுண் கணீரே.” (நற்.263)
இது ‘யாம் உரையாமாயினுங்கண் உரைத்தன’ என்றலின் இரண்டுங்
கூறினாள்.
வழிபாடு மறுத்தல் - வருத்தமிகுதியாற் தலைவனை வழிபடுதலை
மறுத்துக் கூறுமிடத்தும்:
உ-ம்:
“என்ன ராயினு மினிநினை வொழிக
வன்ன வாக வுரையல் தோழியாம்
இன்ன மாகநத் துறந்தோர் நட்பெவன்
மரனா ருடுக்கை மலையுறை குறவர்
அறியா தறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற் றார முருக்கிப் பையென
மரம்வறி தாகச் சோர்ந்துக் காங்கென்
அறிவு முள்ளமு மவர்வயிற் சென்றென
வறிதா லிகுளையென் யாக்கை யினியவர்
வரினு நோய்மருந் தல்லர் வாரா
தவண ராகுக காதல ரிவணங்
காமம் படரட வருந்திய
நோய்மலி வருத்த காணன்மா ரெமரே” (நற்.64)
“உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
திருப்பினெம்மளவைத் தன்றே வருத்தின்
வான்றோய் வற்றே காமம்
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே” (குறுந்.102)
என ரும்.
“நீயுடம் படுதலின் யான்றர வந்து
குறிநின் றனனே குன்ற நாடன்
இன்றை யளவை சென்றைக் கென்றி
கையுங் காலு மோய்வன வொழுங்கி
தீயுறு தளிரி னடுங்கி
யாவது மில்லையான் செயற்குரி யதுவே.” (குறுந்.388)
இதுத் தோழி கூற்றே; ‘சென்றைக்க’ வென்றதனான் தலைவி
மறுத்தமை பெற்றாம்.
மறுத்து எதிர்கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே
அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும்: அது,
“கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முறிந்துநிலம் படாஅ
நாளுடைய யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.” (குறுந்.112)
இது ‘நாணேயுள்ளது கற்புப்போம்’ என்றலின் மறுத்தெதிர்
கோடலாம்.
பழி தீர்முறுவல் சிறிதே தோற்றல் - தன் கற்பிற்கு வரும் பழி
தீர்ந்த தன்மையான் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே
தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும்:
தலைவனான் தோன்றிய நோயும் பசலையும் முருகனான் தீர்ந்த
தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் ‘பழி’ யென்றார்.
உ-ம்:
“அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்
இதுவென வறியா மறுவரற் பொழுதின்
படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேட் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக்
களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதி
|