|
வட நூல்களில் வேறே எண்ணுதற்கு உரியன சில இல்லாமல்
எண்ணினாற்போல, ஈண்டும் இளமை முதலிய எட்டும் ஒழிய வேறெண்ணுதற்கு உரியன எட்டு தலைவற்கிலவாகக் கூறல் வேண்டும்; ஈண்டு அவ்வாறின்றித் தலைவற்கு உரியனவாகப் பலவகைகளான எவ்வெட்டுளவாகக் கூறக்கிடந்தமையின் அங்ஙனம் ஆசிரியர் இலக்கணங் கூறாரென மறுக்க. அன்றியும் எட்டும் எடுத்து ஓதுபவென்றும் உதாரண மின்றென்றும் மறுக்க.
இனி ‘முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின கறல், அவன் புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை’ என்பன எட்டுமென்று (தொல்.பொ.271) அவற்றை ஈண்டுக்கொணர்ந்து பொருள்கூறிற், கூற்றுக் கூறுகின்றவிடத்து மெய்ப்பாடு கூறின் ஏனைமெய்ப்பாடுகளுங் கூற்றுக் கூறுகின்றவிடத்தே கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல்வேண்டு மென்று மறுக்க.
பொய்தலை அடுத்த மடலின்கண்ணும் - பொய்யினைத் தலைக் கீடாகவுடைய மடலின் கண்ணும்:
அது மடன்மா கூறியவழி அம்மடலினை மெய்யெனக் கொண்டாள் அதனைப் பொய்யெனக் கோடலாம்.
உ-ம்:
“வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
அவையினும் பலவே சிறுகருங் காக்கை
அவையினும் அவையினும் பலவே குவிமடல்
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே.”
இது மடன்மா கொள்ளக் குறித்தோனைப் பறவைக்குழாந் தம்மை மடலூர விடாவென விளையாட்டுவகையாற் பொய்யென்று இகழ்ந்தது.
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் - தலைவியை ஆற்றுவித்துக் கையற்ற தோழி தலைவிக்கண்ணீரைத் துடைப்பினும்:
உ-ம்:
“யாமெங் காமம்தாங்கவும் தாந்தங்
கெழுதகை மையின் அழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
யேறா திட்ட வேமப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்ட வெங்கண்ணே.” (குறுந்.241)
இது தன் ஆற்றாமைக்கு ஆற்றாத தோழியை ஆற்றுவிக் கின்றாள் அவ்விரண்டுங் கூறியது.
வெறியாட்டிடத்து வெருவின்கண்ணும் - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழித், தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்:
அது பண்டேயுந் தன்பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான், இன்று நம் ஆற்றாமைக்கு மருந்து பிறிது முண்டென் றறியின், வரைவு நீடுமென்று அஞ்சுதல்.
உ-ம்:
“பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்
துனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த
இனியஉள்ளம் இன்னா வாக
முனிதக நிறுத்த நல்க லெவ்வம்
சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிந்தன ளல்ல ளன்னை வார்கோல்
செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர்
|