நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2545
Zoom In NormalZoom Out


 

இது பருவங்கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது.

“நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந்
தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே
பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென
முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென
நிரைய நெஞ்சத் தன்னைக் குய்த்தாண்
டுரையினி வாழி தோழி புரையின்
உண்ணேர் எல்வளை ஞெகிழ்த்தோன் குன்றத்
தண்ணல் நெடுவரை யாடித் தண்ணென
வியலறை மூழ்கிய வளியென்
பசலை யாகந் தீண்டிய சிறிதே.”               (நற்.236)

இது   வரைவிடை  ஆற்றாமை  மிக்குழி அவன்வரையின் முள்கிய
காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலா மென்றது.

“அம்ம வாழி தோழி யவர்போல்
நம்முடைய வாழ்க்கை மறந்தன்று கொல்லோ
மனையெறி யுலக்கையின் தினைகிளி கடியுங்
கான நாடன் பிரிந்தெனத்
தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே.”

இது வன்புறை யெதிரழிந்தது

“சிறுபுன்மாலை சிறுபுன் மாலை
தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச்
செக்கர் கொண்ட சிறுபுன் மாலை
வைகலும் வருதியா லெமக்கே
ஒன்றுஞ் சொல்லாயவர் குன்றகெழு நாட்டே.”

இது மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறியது.

இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

“கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனெனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.”           (குறுந்.30)

இது   வரைதற்குப்  பிரிய  வருந்துகின்றது  என்னென்றாட்குக்  கனவு
நலிவுரைத்தது.

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுர லாகக்
கணக்கலை யிகுக்குங் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்
விழவுக்கள விறலியின் தோன்று நாடன்
உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
பலர்தில் வாழி தோழி அவருள்
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓரியா னாகுவ தெவன்கொல்
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.”      (அகம்.82)

அவனை   ஆயத்தார்   பலருங்  கண்டாரென வந்தோன் முட்டிய
வாறும்  அவருள்  நெகிழ்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங்
காண்க.

“தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழைமா னோக்கின் மடமொழி - நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையு