|
கூறவேண்டுதலில் உண்மைப் பொருளானும் பொய்ப் பொருளானும்
விராவிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யுந் தன்மையின்
தப்பாதவாற்றான் வேறுபல் கவர்பொருள் படக்கூறி ஆராயும்
ஆராய்ச்சிக்கண்ணும்:
நாணான் இறந்து படாமற் கூறுதற்கு ‘வழிநிலை பிழையாது’ என்றார்.
பிறைதொழுவா மெனவுங், கணைகுளித்த புண்கூர் யானை
கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறு சொற் கூறிக்
குறைவுற்று நிற்கின்றான் ஒருவனுளன் அவனை நீயுங் காண்டல்
வேண்டு மெனவும், அவன் என்னைத் தழுவிக் கொண்டு குறைகூறவும்
யான் மறுத்து நின்றேனென்றாற் போலவும் மெய்யும் பொய்யும்
விராயும் பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம்.
உ-ம்:
“முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே
இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும்
பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற்
பெருகொளியான் மிக்க பிறை.”
இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறைதொழாமை அறிந்து
கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர்பொருளாயிற்று.
“பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை யறிவன்மன் - தொண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய்
உதிர முடைத்திதன் கோடு.” (சிற்றெட்டகம்)
இது நடுங்க நாட்டம்; இஃது இறந்துபாடு பயத்தலிற் கந்தருவத்திற்கு
அமையாது.
“தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமால் ஐம்பாலும் - ஐயுறுவல்
பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்
கென்னை இதுவந்த வாறு”
என வழிநிலை பிழையாமற் கவர்பெருளாக நெறிபடுநாட்டம்
நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினேற்கு இங்ஙனம் ஆயிற்றென்னும்.
அது கேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்பல் என்னும்.
உ-ம்:
“பையுண் மாலைப் பழுமரம் படரிய
நொவ்வுப்பறை வாவல் நோன்சிற கேய்க்கும்
மடிசெவிக்குழவி தழீஇப் பெயர்தந்து
இடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர
வெந்திற லாளி வெரீஇச் சந்தின்
பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ்
உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங்
கடுங்கண் யானை காலுற வொற்றலிற்
கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு
பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை
தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல்
யானு மாடிக் காண்கோ தோழி
வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல்
திகழ்புண் முருகன் தீம்புன லலைவாய்க்
கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் களித்த
வொண்பொறி மஞ்ஞை போல்வதோர்
கண்கவர் காரிகை பெறுதலுண்டெனினே”
என வரும்.
“நெருந லெல்லை யேனல் தோன்றித்
திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து
ரவலன் போலுந் தோற்ற முறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்
சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்
குளிர்கொள் தட்டை மதனில புடையாச்
சூரர மகளிரின் நின்ற நீமற்
றியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்
சிறுபுறங் கவையின னாக வதற்கொண்டு
இகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்
உள்ளவ னறித லஞ்சி உள்ளில்
கடிய கூறிக் கைபிணி விடாஅ
வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற
என்னுரத் தகைமையிற் பெயர்த்துப் பிறி தென்வயிற்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்
தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்
தோலாவா றில்லை தோழிநாஞ் சென்மோ
சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே
மாசின் றாதலு மறியா னேசற்
றென்குறைப் புறனிலை முயலும்
அண்க ணாளனை நகுகம் யாமே.” (அகம்.32)
என்னும் அகப்பாட்டுங் கொள்க.
“எழாஅ வாகலின் எழினலந் தொலைய
அழாஅ தீமோ
|