|
யெலாம் புன்னை புகன்று.” (திணை.நூற்.58)
“ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந்
துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.” (குறுந்.113)
இவை பகற்குறிநேர்ந்து இடங்காட்டின.
”செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட் டியானைக்
கழறொடிச் சேஎய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.” (குறுந்.1)
இது, தோழி தலைவியை இடத்துயர்த்து நீங்கியது.
“ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்
கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே
பாடின் னருவி யாடுத லினிதே
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற்
பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற்
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ
யன்னை முயங்கத் துயிலின் னாதே.” (குறுந்.353)
இஃது இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாகப் பகற்குறி
நேர்வாள்போல் இரவுக்காப்புமிகுதி கூறியது.
‘பாடின்னருவி ஆட’ என்றாள் அதன்கண் உதவினானென்பது பற்றி;
அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று.
“செறுவார்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கும் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.” (குறுந்.336)
இது, தலைவன் இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தது.
“நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப
மன்றம் போழு நாடன் றோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்துந்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுங்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவு மாகா தஃகி யோனே.” (குறுந்.346)
இது, தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது.
“தண்ணந் துறைவன் கடும்பரி மான்தேர்
காலை வந்து மாலை பெயரினும்
பெரிது புலம்பின்றே கானல்
சிறிது புலம்பினமால் தோழி நாமே.”
இது, தலைவியது ஆற்றாமைகண்டு நம் வருத்தந் தீர்தற்கு
இரவுக்குறியும் வேண்டுமென்றது.
“ஏனம் இடந்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் தோழிநம்
மேனி பசப்புக் கெட.” (திணை.ஐம்.4)
இது தலைவன் வருவனென்றது.
“சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலும்
இரவுக்குறிக் கொண்கன் வந்தனன்
விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே.”
(சிற்றெட்டகம்)
இஃது இரவுக்குறி. தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது.
“அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தண்கயத் தமன்ற கூதளங் குழைய
இன்னிசை யருவிப் பாடு மென்னதூஉங்
கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை
ஊட்டி அன்ன வெண்
|