நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2562
Zoom In NormalZoom Out


 

புல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவந் திண்டிமில்
எல்லுத் தொழின்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர்வளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன்
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கட லசைவளி யெறிதொறும் வினைவிட்டு
முன்றிற் றாழைத் தூங்குந்
தெண்டிரைப் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே” (அகம்.340)

இதனுள் தனக்கும் புரவிக்கும் கொடுப்பன கூறித்தடுத்தவாறு காண்க.

“நாள்வலை முகந்த” (அகம்.300) என்பதும் அது.

புணர்ந்துழி   உணர்ந்த அறிமடச்சிறப்பினும் - இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்தகாலத்து  அவன்  தீங்கு உணராது, அவனை நன்றாக உணர்ந்த
அறிவினது மடப்பங்கூறித் தங்காதற்சிறப்பு உரைத்த இடத்தும்:

உ-ம்:

“சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ வைய மற்றியாம்
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல்
எமக்கும் பெரும்புல வாகி
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.”       (குறுந்.169)

இஃது அவனொடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றியமையாமை
கூறிக் காதற்சிறப்பு உரைத்தது.

ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - தலைவற்குத் தலைவியைப்
பாதுகாத்துக்   கொள்ளெனக்   கூறுங்   கிளவியது   பகுதிக்கண்ணும்:
தோழிமேன கிளவி.

பகுதியாவன வரைவிடைப்பிரிவு முதலிய  பிரிவிடத்தும் புனத்திடைப்
புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்துங் கூறுவனவாம்.

உ-ம்:

“நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தன் மாமலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச்சேர்ப்ப
தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்
டன்னா யென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ விலளே”        (குறுந்.397)

“பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
வொருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே”              (குறுந்.115)

“எறிந்தெமர் தாமுழுத வின்குர லேனன்
மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு”       (ஐந்திணை ஐம்.18)

“அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவி நீள்புனங் கண்டும்
பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.”         (ஐங்குறு.284)

இது,     தினை  அரிந்துழிக்  கிளியை  நோக்கிக்  கூறுவாள்போற்
சிறைப்புறமாக   ஓம்படுத்தது.  இன்னும்  ஓம்படைக் கிளவியென்றதற்கு
இவளை நீ