நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2565
Zoom In NormalZoom Out


 

மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோ டியம்ப நுண்பனி யரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்
தவல நெஞ்சினம் சினம்பெயர வுயர்திரை
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்ப
னொடுதேர் நுண்ணுக நுழைத்த மாவே.”          (நற்.58)

இது,   பகற்குறி   வந்து  போகின்ற தலைவன் புறக்கிடை  நோக்கி
ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது.

“விளையா டாயமொ டோரை யாடா
திளையோ ரில்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனு மன்றே யாக்கமுந் தேய்மெனக்
குறுநுரை சுமந்து நறுமல ருந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண வாடுகம்
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே
செல்கென விடுநண்மற் கொல்லோ வெல்லுமிழ்ந்
துரவுரு முரறு மரையிரு ணடுநாட்
கொடிநுடங் கிலங்கின மின்னி
ஆடுமழை யிறுத்தன்றவர் கோடுயர் குன்றே.”      (நற்.68)

இது,  வரைவுநீட    ஆற்றாத    தலைவி வேறுபாடு புறத்தார்க்குப்
புலனாகாமையும்  இயையும்,  இங்ஙனங் கூறுவாரைப் பெறினெனக் கூறி
வற்புறுத்தது.

“மறுகுபு புகலு நெஞ்ச நோயின்
றிறுகப் புல்லி முயங்குகஞ்
சிறுபுன் மாலை செயிர்ப்ப நாமே.”

இது,   பிரிவடையாற்றாத தலைவியைத்   தோழி  நன்னிமித்தங்கூறி
வற்புறுத்தது.

ஆற்றது    தீமை  அறிவுறு  கலக்கமும்  -  தலைவன்  வருகின்ற
நெறியினது    தீமையைத்   தாங்கள்   அறிதலுற்றதனானே   எய்திய
கலக்கத்தின் கண்ணும்: தோழிமேன கிளவி.

உ-ம்:

“கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே
உருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார்
வயக்களிறு பொருத வாள்வரி யுழுவை
கன்முகைச் சிலம்பிற் கழூஉ மன்னோ
மென்றோள் நெகிழ்ந்துநாம் வருந்தினு மின்றவர்
வாரா ராயினு நன்றுமற் றில்ல
உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிய
பெயல்கான் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி யரவுத்தேர்ந் துழல
உருமுச்சிவந் தெறியு மோங்குவரை யாறே.”      (நற்.255)

“கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு
மடிசெவி வேழம் வெரீஇ - அடியோசை
அஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்.”           (ஐந்திணை ஐம்.16)

இவை இரவுக் குறிவரவான் தலைவி வருந்துவளென்றது.

“கரைபொரு கான்யாற்றங் கல்லதர்” என்பதும்  (யா.வி.76)  அது.
“கூருகி ரெண்கின்” என்னும் (112) அகப்பாட்டுங் காண்க.

‘கலக்கம்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆற்றிடை ஏதமின்றிச்