|
தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்.” (திணை.நூற்.5)
இஃது இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக்குக்
கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.
“புன்னையம் பூம்பொழிலே போற்றவே பாதுகா
அன்னப் பெடையே யறமறவல் - மன்னுங்
கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லூர்
நெடுங்கடலே நீயு நினை.”
இது, புனங் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தோழி
கூறியது.
“பண்டைக்கொ ணல்வினை யில்லேம் பதிப்பெயர்துங்
கண்டற் குலங்காள் கழியருகேர் - முண்டகங்காள்
நாணி யிராதே நயந்தங் கவர்க்குரைமின்
பேணி யவர்செறித்த லான்.”
இது, தலைவற்குக் கூறுமினென்றது.
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப்பட
(காதன் மிகுதி உளப்படக் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி)
அவளிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழாநிற்க இருவகையிடத்தையும்
இருவகைக் காலத்தையுந் தாம் வரைந்து கூறும் நிலைமையைத்
தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவியையும்; பிறவும் -
கூறியவாறன்றிப் பிறவாறாக அவன் வயின் தோன்றிய கிளவியையும்;
நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ - அவன் பிறந்த
நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய
மனையும் பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ்வருணத்துள்
இன்னவழி இவனென்றலும் ஒரு வயிற்றுப் பிறந்தோர் பலருள்ளுஞ்
சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வாதிறந்தனவாதல் நோக்கித்
தலைவனிடத்தே தோழி கூறிய கிளவியோடே கூடி; அனைநிலை
வகையான் வரைதல் வேண்டினும் - அத்தன்மைத்தாகிய நிலைமையின்
கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பிய வழியும்: தோழிமேன
கிளவி.
‘பகற் புணர் களனே’ (தொல்.பொ.132)
‘இரவுக்குறியே’
(தொல்.பொ.131) ‘குறியெனப் படுவது’ (தொல்.பொ.130) என்னுஞ்
சூத்திரங்களாற் களனும் பொழுதும் உணர்க.
உ-ம்:
“புன்னை காத்தும் அன்னம் ஓப்பியும்
பனியிருங் கானல் யாம்விளை யாட
மல்லலம் பேரூர் மறுகின்
அல்கலு மோவா தலரா கின்றே.”
இது பகற்குறி விலக்கியது.
“நெடுமலை நன்னாட நின்வேல் துணையாக்
கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிருள்
இன்னா வதர்வர வீர்ங்கோதை மாதராள்
என்னாவா ளென்னுமென் னெஞ்சு.” (ஐந்திணை ஐம்.19)
இஃது இரவுக்குறி விலக்கியது.
“இரவு வாரலை யைய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற்
பகலும் பெறுதியிவள் தடமென் றோளே.” (கலித்.49)
இது பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது.
“திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல்
விரைமேவு பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய்ப் பசும்புற இப்பிகான் முத்தம்
படுவா யிருளகற்றும் பாத்து.” (திணை.நூற்.48)
இது
|