நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2568
Zoom In NormalZoom Out


 

“இரவு வாரலை யைய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற்
பகலும் பெறுதியிவள் தடமென் றோளே.”       (கலித்.49)

இது பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது.

“திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல்
விரைமேவு பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய்ப் பசும்புற இப்பிகான் முத்தம்
படுவா யிருளகற்றும் பாத்து.”            (திணை.நூற்.48)

இதுவும் அது.

இவை வரவுநிலை விலக்கின.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃதறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.”          (குறுந்.18)

இது காதன் மிகுதி கூறியது.

‘பிறவும்’ என்றதனான்,

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரு நெடுவரைத் ததும்பிய வருவி
தண்ணென் முழவி னிமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்க னாடநின் னயந்தோள் கண்ணே”     (குறுந்.365)

இது  யான் வரையுந் துணையும் ஆற்றுவளோ என்றாற்கு  ஆற்றா
ளென்றது.

“நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெரூஉ நாட
வல்லைமன் றம்ம பொய்த்தல்
வல்லாய் மன்றநீ யல்லது செயலே.”         (ஐங்குறு.287)

இது தலைவனைப் பழித்தது.

“கானற் கண்டற் கழன்றுகு பைங்காய்
நீனிற விருங்கழி யுட்பட வீழ்ந்தென
வுறுகா றூக்கத் தூங்கி யாம்பல்
சிறுவெண் காக்கை யாவித் தன்ன
வெளிய விரியுந் துறைவ வென்றும்
அளிய பெரிய கேண்மை நும்போற்
சால்பெதிர் கொண்ட செம்மை யோரும்
தேறா நெஞ்சங் கையறுபு வாட
நீடின்று விரும்பா ராயின்
வாழ்தன்மற் றெவனோ தேய்கமா தெளிவே.”     (நற்.345)

இஃது ஆற்றாத தலைவியைக்  கடிதின்  வரைவேனென்று தலைவன்
தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது.

“குன்றக் குறவன் காதன் மடமகண்
மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் படுகிளி யோப்பலள்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.”    (ஐங்குறு.260)

இது புனங்காவல் இனியின்று என்றது.

“என்னாங்கொ னீடி லினவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
யிருவியா மேன லினி.”                 (திணை.நூற்.18)

இது,  தினை அரிகின்றமையுஞ்  சுற்றத்தார்  பொருள்  வேட்கையுங்
கூறியது.

“வெறிகமழ் வெற்பவென் மெய்ந்நீர்மை கொண்ட
தறியாண்மற் றன்னோ அணங்கணங்கிற் றென்று
மறியீர்த் துதிரந்தூய் வேலற் றரீஇ
வெறியோ டலம்வரும் யாய்.”         (ஐந்திணை ஐம்.20)

இது வெறியச்சுறுத்தியது.

“இனமீ னிருங்கழி யோத முலாவ
மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை