நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2585
Zoom In NormalZoom Out


 

நீவிக்
கோங்கு முகைத்தன்ன குவிமுலை யாகத்
தின்றுயி லமர்ந்தனை யாயின் வண்டுபட
விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப்
பூவேய் புன்னையந் தண்பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே.”        (அகம்.240)

எனத் தோழி களஞ்சுட்டியவாறும் காண்க.                     (30)

துணையின்று கழியுநா ளித்துணையவெனல்

122. முந்நா ளல்லது துணையின்று கழியாது
அந்நா ளகத்தும் அதுவரை வின்றே.

இதுவும்    அதிகாரங்கள்  தலைவிக்  கெய்தியதோர்   இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்.)    முந்நாள் அல்லது துணையின்று கழியாது - பூப்பெய்திய
மூன்றுநாளும்  அல்லது   கூட்டமின்றி  இக்கள  வொழுக்கங் கழியாது;
அந்நாளகத்தும் அது வரைவு இன்றே - அம்மூன்றுநாளின்  அகப்பட்ட
நாளாகிய  ஒருநாளினும்  இரண்டு  நாளினுந்  துணையின்றிக்  கழிதல்
நீக்கப்படாது எ-று.

‘அது’ என்றது துணையின்று கழிதலை. பூப்பினான்   துணையின்றிக்
கழிதல்  பொருந்திற்றாயினும்,  பூப்பின்றி  ஒருநாளும் இரண்டு  நாளுந்
துணையின்றிக்  கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப்
புலனாம்  என்று  அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகா வென்றற்கு ‘வரை
வின்று’  என்றார்.  இன்னோரன்ன  காரணந்  தலைவற்  கின்மையின்
அவனான் துணையின்றிக் கழிதல் இன்றாயிற்று.

உ-ம்:

“குக்கூ வென்றது கோழி அதனெதிர்
துட்கென் றற்றென்றூஉ நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.”     (குறுந்.157)

இது   முந்நாளைப்  பிரிவாகிய பூப்பிடைப்பிரிவு வந்துழித்  தலைவி
கூறியது.

இனி     அல்லகுறிப்பட்டுழி   ஒருநாளும்  இரண்டுநாளும்  இடை
யீடாமென்றுணர்க.   பூப்புநிகழாத   காலத்துக்  களவொழுக்கம்  பூப்பு
நிகழ்காலம்   வரையப்பட்டதென்று   உரைப்பாரும்  உளர்;  இவ்விதி
அந்தணர்க்குக்     கூறியதன்று;     அரசர்     வணிகராதியவர்க்குச்
சிறுபான்மையாகவும்,    ஏனை    வேளாளர்    ஆயர்    வேட்டுவர்
முதலியோர்க்குப்   பெரும்பான்மையாகவுங்  கூறிய  விதியென்றுணர்க.
என்னை?   பூப்பு   நிகழுங்   காலத்து   வரையாது   களவொழுக்கம்
நிகழ்த்தினார்க்கு,

‘அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட வொழுகலும்’     (தொல்.கற்பியல்.5)

என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பாராதலின்.

இதனானே  அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால்  அறத்தொடு
நின்றும் வரைதல் பெறுதும்.                                 (31)

தலைவி அறத்தொடு நிற்றல்

123. பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம்
நன்னய