|
கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப்
படைநிலா விலங்குங் கடன்மருள் தானை
மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாது விலங்குசினஞ் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய
நீர்மா ணெஃக நிறத்துச்சென் றழுந்தக்
கூர்மத னழியரோ நெஞ்சே யானா
தெளிய ளல்லோட் கருதி
விளியா வெவ்வந் தலைத்தந் தோயே.”
(அகம்.212)
வடமலை மிசையோன் கண்ணில் முடவன்
தென்றிசை யெல்லை விண்புகு பொதியில்
சூருடை நெடுஞ்சுனை நீர்வேட் டாங்கு
வருந்தினை வாழியென் உள்ளம் சாரல்
பொருது புறங்கண்ட பூநுத லொருத்தல்
சிலம்பிழி பொழுதி னத்தம் பெயரிய
வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக்
கல்லக வெற்பன் மடமகள்
மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே.”
இவை அல்ல குறிப்பட்டு நிங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியன.
(43)
தலைவற்குத் தீயஇராசியினும் தீயநாளினும் துறந்த
ஒழுக்கமில்லையெனல்
135. மறைந்த வொழுக்கத் தோரையும் நாளும்
துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை.
இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
ஓரையும் நாளுந் துறந்த ஒழுக்கம் - தீய இராசியின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங்
கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்; கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் களவொழுக்கத்தின்கண் இல்லை; எனவே கற்பின்கணுண்டு எ-று.
ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பன தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும். கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122) முற்கூறிற்று. இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப்
பிராயச்சித்தம் அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை ‘வந்த குற்றம் வழிகெடவொழுகலும்’ (தொல்.பொ.146) எனக் கற்பியலிற் கூறுப. (44)
தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல்
136. ஆறின தருமையு மழிவு மச்சமும்
ஊறு முளப்பட அதனோ ரன்ன.
இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது.
(இ-ள்.)
உளப்பட - நிலவும் இருளும் பகைவரும் போல் வனபற்றிச்
செலவழுங்குதல் உளப்பட; ஆறினது அருமையும் - நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்தவழிக் கூறுதலும்; அழிவும் - குறைந்த மனத்தனாதலும்; அச்சமும் - பாம்பும்
விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும்; ஊறும்
|