|
ன்று தலைவி மனத்து நிகழாநின்ற
வருத்தந் தீரும்படி மிக்க
வேட்கையோடு கூடியிருந்து வேதஞ்சொல்லுதலுற்ற பொருளின்
கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக் கூறும்.
அது முதனாள் தண்கதிர்ச் செல்வற்கும்,
இடைநாள்
கந்தருவர்க்கும், பின்னாள்
அங்கியங் கடவுட்கும் அளித்து
நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான்
நுகர வேண்டிற்று, அங்ஙனம் வேதங்
கூறுதலான் எனத்
தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று.
சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது
வானோர்
அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் -
அமுதிற்கு மாறாகிய நஞ்சை நுகரினும் நீ கையான் தீண்டின பொருள்
எமக்கு உறுதியைத்தருதலின் தேவர்களுடைய அமிர்தத்தை ஒக்கும்
எமக்கெனப் புனைந்துரைத்து இதற்குக் காரணங் கூறென்று அடிசிலும்
பூவுந் தலைவி தொடுதலிடத்தும்: கூற்று நிகழும்.
உவமை இழிவு சிறப்பு.
“வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர்”
(குறுந்.196)
எனத் தலைவன் கூற்றினைத் தோழிகொண்டு கூறியவாறு காண்க.
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங்காட்டிய குறிப்பினும் - வேட்பித்த ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார் கண்ணும், முற்ற உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர்
கண்ணும், முடிவில்லாச் சிறப்பினையுடைய தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைத் தான் தொழுதுகாட்டிய குறிப்பின் கண்ணும்:
‘பிறர்பிற’ரென்றார் தேவர் மூவரென்பதுபற்றி.
தன்னையன்றித் தெய்வந் தொழாதாளை இத்தன்மையோரைத் தொழல் வேண்டு மென்று தொழுது காட்டினான். குறிக்கொளுங் கூற்றான் உரைத்தலிற் குறிப்பினு மென்றார். உதாரணம் வந்துழிக் காண்க.
ஒழுக்கத்துக் களவினுள்நிகழ்ந்த அருமையைப்
புலம்பி அலமரல்
உள்ளமோடு அளவிய இடத்தும் - வணக்கஞ்செய்தும் எதிர்மொழியாது வினாயவழிப் பிறராற் கூற்று நிகழ்ச்சியும் எதிர்ப்பட்டுழி எழுந்தொடுக் கியுந்தான் அக்காலத்து
|