நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2608
Zoom In NormalZoom Out


 

ஒழுகும்   ஒழுக்கத்திடத்து   முன்னர்க்   களவுக்  காலத்து  நிகழ்ந்த
கூட்டத்  தருமையைத்  தனித்துச்  சுழலுதலையுடைய  உள்ளத்தோடே
உசாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும்.

உதாரணம்   வந்துழிக்   காண்க.   “கவவுக்   கடுங்குரையள்”
(குறுந்.132)
என்பது காட்டுவாரும் உளர்.

அந்தரத்து  எழுதிய  எழுத்தின்  மான  வந்த  குற்றம்  வழிகெட
ஒழுகலும் (வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட
ஒழுகுதலும்) -  களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய
எழுந்து வழிகெடுமாறு  போல  வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து
ஒழுகுதற்கண்ணும்:

அது  முன்புபோலக்  குற்றஞ்சான்ற  பொருளை   வழுவமைத்துக்
கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம்.

“பொய்யற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தால்”                        (கலி.15)

என்றவழி ‘மையற்ற படிவம்’ எனத் தலைவன் கூறியதனைத் தோழி
கூறியவாறு காண்க.

அழியல்  அஞ்சல்  என்று  ஆஇரு  பொருளினும் - வந்த குற்றம்
நினக்கு   உளதென்று   அழியலெனவும்  எனக்குள  தென்று  அஞ்ச
லெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக் கண்ணும்:

இவை  இரண்டாகக்  கொள்ளின் முப்பத்துநான்காமாதலின் இருவர்
குற்றமுங்  குற்றமென   ஒன்றாக்கியது.   தெய்வத்தினாதலின்   ஏதம்
பயவாதென்றான்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”        (குறுந்.40)

இது  நம்மானன்றி நெஞ்சந் தம்மில் தாங் கலத்தலின் தெய்வத்தான்
ஆயிற்றெனத் தெருட்டியது.

தான் அவட் பிழைத்த பருவத்தானும் - அங்ஙனந் தெய்வத்தினான்
ஆயிற்றேனுங்  குற்றமேயன்றோ  என  உட்கொண்ட அவட்கு  யான்
காதன்    மிகுதியாற்   புணர்ச்சிவேண்ட   என்   குறிப்பிற்  கேற்ப
ஒழுகினையாகலின் நினக்கொரு குற்றமின்றென்று