|
தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும்: கூற்று நிகழும்.
உ-ம்:
“நகைநீ கேளாய் தோழி தகைபெற
நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு
நாணிழுக் குற்றமை யறிகுநர் போல
நாங்கண் டனையநங் கேள்வர்
தாங்கண் டனைய நாமென் றோரே.”
இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி
நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினார்போல நாங் குறித்துழி வந்தொழுகிய தலைவர் தாங்குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினாரெனத் தோழிக்குத் தலைவி கூறியவழித் தலைவன் தன் பிழைப்புக் கூறியவாறு காண்க.
(நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின்
ஆகிய தகுதிக் கண்ணும்) தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவனான் உளதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி
தன் வயிற்றகத்தே கொள்கையினானே; பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக்கண்ணும் - வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரொடு
கூடி இருத்தற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப் பாட்டின் கண்ணும்:
‘தன்னினாகிய மெய்’ - சிகருப்பம். அவிப்பலிகொள்ளும் அங்கியங் கடவுட்கும் அது கொடுக்குந் தலைவர்க்கும் இடையே நின்று கொடுப் பித்தலின் அந்தணரை வாயிலென்றார்.
“ஆற்றல் சான்ற தாமே யன்றியும்
நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை
வட்டிகைப் படூஉந் திட்ட மேய்ப்ப
அரிமயி ரொழுகுநின் அவ்வயி றருளி
மறைநவில் ஒழுக்கஞ் செய்தும் என்றனர்
துனிதீர் கிளவிநம் தவத்தினும்
நனிவாய்த் தனவால் முனிவர்தஞ் சொல்லே.”
இதனுள் நந்தலைவ ரேயன்றிச் சுற்றத்தா
|