நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2610
Zoom In NormalZoom Out


 

ரும்  நோற்று  ஒரு  கருப்பந் தங்கிய நினது வயிற்றைக்கண்டு உவந்து
அதற்கேற்ற சடங்கு செய்து மென்றா ரெனவும், முற்காலத்து நாங்கேட்ப
நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவுங் கூறியவாறு
காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் - அங்ஙனஞ் சிறப்பெய்திய
புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை சேர்ந்த காலத்தே:

நெய்  அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி -  சுற்றக் குழாத்துடனே
வாலாமை   வரைதலின்றி   எண்ணெயாடும்   மயக்கத்தை  விரும்பிய
தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து:

ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்:

அமரர்ச்  சுட்டியும்  -  தேவர்கள்  புதல்வனைப்  பாதுகாத்தலைக்
கருதியும்:

செய்பெருஞ்   சிறப்பொடு   சேர்தற்  கண்ணும்  -  அக்காலத்துச்
செய்யும்  பெரிய  சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற்
கண்ணும்: 

சிறப்பாவன பிறந்த புதல்வன் முகங்காண்டலும்  ஐம்படை பூட்டலும்
பெயரிடுதலும்   முதலியனவும்,   எல்லா   முனிவர்க்குந்  தேவர்க்கும்
அந்தணர்க்குங்  கொடுத்தலும்,  சேர்தல்  கூறவே,  கருப்பம் முதிர்ந்த
காலத்துத் தலைவன் பிறரொடு கூட்டமுண்மையுங் கூறிற்றாம். ஆண்டுத்
தோழி கூறுவனவும் ‘ஒன்றென முடித்த’லாற் கொள்க.

“வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி
நெய்யோ டிமைக்கும்ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த் தவ்வரித்
திதலை யல்குன் முதுபெண்டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை யொற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாண் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் கைபுதைத் ததுவே.”       (நற்.370)

இது