|
வந்துழிக் காண்க.
உறலருங்கு உண்மையின் ஊடல்
மிகுத்தோளைப் பிறபிற
பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் - தலைவற்குச்
சாந்தழி வேருங்
குறி பெற்றார் கூந்தல் துகளும் உண்மையின்
அவனைக் கூடுதல்
அருமையினானே ஊடன் மிகுந்த தலைவியைப் பிறபிற பெண்டிர்
ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்:
என்றது உலகத்துத் தலைவரொடு கூடுந் தலைவியர் மனையறத்த இவ்வாறொழுகுவரென அவர் ஒழுக்கம் காட்டி அறத்துறைப்படுத்தலாம். மறைவெளிப்படுத்தலுந் தமரிற்பெறுதலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் ‘ஊடல்மிகுத்தோள்’ என்றார், இரத்தற் பாலினும் பெண்பால் காட்டிப் பெயத்தலிற் ‘பிறபிற பெண்டிர்’ என்றார்.
“புனம்வளர் பூங்கொடி”
என்னும் மருதக்கலியுள்,
“ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன்
தண்டா ரகலம் புகும்”
(கலி.92)
எனக் கூறி,
“அனவகை யால்யான் கண்ட கனவுதான்
நனவாகக் காண்டை நறுநுதால் பன்மாணுங்
கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப்
பிரிந்தீர் புணர்தம்மின் என்பன போல
அரும்பவிழ் பூஞ்சினை தோறும்இருங்குயில்
ஆனா தகவும் பொழுதினால் மேவர
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார்
ஆனா விருப்போ டணியயர்வு காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு.”
(கலி.92)
எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி தோன்றுவித்து மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார் நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க.
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் - பரத்தையிற்
பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே தனிமை யுற்றிருந்த தலைமகனையுந்
தலைமகளையுந் தனதருளினானே தானும் பிரிவி னெச்சத்துப்
|