|
பும்
என்பு நெகிழ்க்குங் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொ டோராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளைப்
புதலிவ ராடமைத் தும்பி குயின்ற
அகலா அந்துளை கோடை முகத்தலின்
நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல்
ஆய்க்குழற் பாணியின் ஐதுவந் திசைக்குந்
தேக்கமழ் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து
யாத்த தூணித் தலைதிறந் தவைபோல்
பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர்
கழறுளை முத்திற் செந்நிலத் துதிர
மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை
புயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல்
செறிதொடி முன்கைநங் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே.” (அகம்.225)
இது நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது.
“வயங்கு மணிபொருத”
என்பதும் அது.
(அகம்.166)
(உடன்சேறல் செய்கையொடு அன்ன பிறவும்
மடம்பட வந்த தோழிக்கண்ணும்) (101) அன்னவும் பிற (102) - நீ களவில் தேற்றிய தெளிவகப்படுத்தலுந் தீராத் தேற்றமும் பொய்யாம்; செய்கையொடு உடன்சேறல் - அவை பொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க; மடம்பட வந்த தோழிக்கண்ணும் - என்று தன்னறியாமை தோன்றக் கூறிவந்த தோழிக்கண்ணும்: கூற்று நிகழும்.
உடன் கொண்டு போதன் முறைமையன்றென்று அறியாமற் கூறலின் ‘மடம்பட’ வென்றார். செய்கைகளாவன தலைவன் ‘கைபுனை வல்வில்’ நாண் ஊர்ந்தவழி இவள் ‘மையில் வாண்முகம் பசப்பூர்’தலும் அவன் ‘புனைமாண் மரீஇய அம்பு’ தெரிந்தவழி
இவள் ‘இனைநோக் குண்கண்ணீர் நில்லா’மையும் (கலி.7) பிறவுமாம்.
“பாஅலஞ்செவி”
என்னும் பாலைக்கலியுள்,
“ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையுள்
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ”
(கலி.5)
எனவும்,
“அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்
|