நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2617
Zoom In NormalZoom Out


 

குச் சொல்லிச் செலவு அழுங்குதலும் பிறவுமாம்.

“நெஞ்ச  நடுக்குற”  (கலி.24)  என்னும் பாலைக்கலியுள் கனவிற்
கூறியவாறு காண்க.

“உண்ணா மையி னுயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல
வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங்
கான யானை கவினழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின் வறுமை யஞ்சுதி யழிதக
வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவேல் எஃகிலை யிமைக்கு
மழைமருள் பஃறோன் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கட லோதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.”  (அகம்.123)

இது போவேமோ தவிர்வேமோ என்றது.

“அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்
தாளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு வயக்களி றிழுக்குந்
துன்னருங் கானம் என்னாய் நீயே
குவளை யுண்கண் இவளீண் டொழிய
வாள்வினைக் ககறி யாயி னின்னொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா வந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய
ஆய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே.”      (நற்.205)

இஃது இவள் நலனழியுமென்று செலவழுங்கியது.

“தேர்செல அழுங்கத் திருவிற் கோலி
ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே
வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய
யான்றொடங் கினெனா னிற்புறந் தரவே.”    (ஐங்குறு.428)

இஃது ஐயந் தீர்த்தது.

“ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி அவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே.”     (குறுந்.63)

இது தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது.

மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும் - பிரி