|
ந்த தலைவன் இடைச்சுரத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழியும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்:
“உழையணந் துண்ட விறைவாங் குயர்சினைப்
புல்லரை இரத்திப் பசுங்காய் பொற்பக்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால்
அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறு மடந்தை யென்றலின் தான்தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந்
துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத் தியவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.”
(நற்.113)
இஃது உருவு வெளிப்பட்டுக் கூறியது.
“ஒன்று தெரிந் துரைத்திசின் நெஞ்ச புன்காற்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற்
களிறுநின் றிறந்த நீரல் ஈரத்துப்
பால்வீ தோன்முலை யகடுநிலஞ் சேர்த்திப்
பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே
யாள்வினைக் ககல்வா மெனினும்
மீள்வா மெனினு நீ துணிந் ததுவே.”
(நற்.103)
இது வேறுபட்டு மீட்டுவரவு ஆய்ந்தது.
“ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை
வெம்முனை யருஞ்சுரம் நீந்தி நம்மொடு
மறுதரு வதுகொல் தானே செறிதொடி
கழிந்துகு நிலைய வாக
ஒழிந்தோள் கொண்டவென் உரங்கெழு நெஞ்சே.
(ஐங்குறு.329)
இது மீளலுறும் நெஞ்சினை நொந்து
தலைவன் உழையர்க்கு
உரைத்தது.
“நெடுங்கழை முளிய வேனில் நீடிக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய வாயின முன்னே யினியே
யொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந்
தண்ணிய வாயின சு
|