நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2619
Zoom In NormalZoom Out


 

ரத்திடை யாறே. ”                      (ஐங்குறு.322)

இஃது   இடைச்சுரத்துத்  தலைவி  குணம்  நினைந்து  இரங்கியது.
இன்னும்  ‘இரட்டுறமொழித’  லென்பதனாற்  செய்வினை முற்றி மீண்டு
வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது,

“என்றுகொல் எய்தும் ஞான்றே சென்ற
வளமலை நாடன் மடமகள்
இளமுலை ஆகத் தின்னுயிர்ப் புணர்ப்பே”
“கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்பட ரன்ன செங்குழை யகந்தோ
றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா
யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்
துப்பி னன்ன செங்கோட் டியவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க்
கொடுநுண் ணோதி மகளிர் ஓக்கிய
தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி
நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங்
குன்றுபி னொழியப் போகியுரந் துரந்து
ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது
துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் எய்திப் பன்மாண்
ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக்
கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்
அந்தீங் கிளவிக்குறுமகள்
மென்றோள் பெறல்நசைஇச் சென்றவெ னெஞ்சே” (அகம்.9)

எனவரும்.   இன்னும்   வேறுபட  வருவனவெல்லாம்  இதன்கண்
அடக்குக.

அவ்வழிப் பெருகிய  சிறப்பின்கண்ணும்  -  பிரிந்தவிடத்துத் தான்
பெற்ற, பெருக்கம் எய்திய சிறப்பின்கண்ணும் மனமகிழ்ந்து கூறும்.

சிறப்பாவன பகைவென்று திறை முதலியன கோடலு