நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2620
Zoom In NormalZoom Out


 

ம் பொருண் முடித்தலுந் துறைபோகிய ஓத்தும் பிறவுமாம்.

உ-ம்:

“கேள்கே டூன்றவுங் கிளைஞ  ராரவும்”  (அகம்.93)   எனவும்,
“தாழிருள் துமிய” (குறுந்.  270)  என்பதனுட்  “செய்வினை முடித்த
செம்மலுள்ளமொடு”   எனவும்,   மனமகிழ்ந்து   கூறியவாறு  காண்க.
“முன்னியது    முடித்தனமாயின்”    என்னும்   (169)   நற்றிணையுட்
பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க.

பேரிசை  ஊர்திப்  பாகர்  பாங்கினும் - அச்சிறப்புக்களை எய்திய
தலைவன்  பெரிய  புகழையுடைத்தாகிய  தேரையுடைய  பாகரிடத்தும்:
கூற்று நிகழ்த்தும்.

அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார்.

“இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்த தல்லது வந்த
ஆறுநனி யறிந்தன்றோ விலனோ தாஅய்
முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
மானுரு வாகநின் மனம்பூட்சிடினையோ
உரைமதி வாழியோ வலவ எனத்தன்
வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கன னெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே.”  (அகம்.384)

இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க.

“மறத்தற் கரிதாற் பாக பன்னாள்
வறத்தொடு பொருந்திய வுலகுதொழிற் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீ ரவல்வர
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை
மணியொலி கேளாள் வாணுத லதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல்புக் கறியுந ராக மெல்லென
மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குர லழுத்திய
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்