|
ந்தயர் நிலயே.”
(நற்.42)
இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.
“ஊர்க பாக வொருவினை கழிய”
(அகம்.44)
“செல்க தேரே நல்வலம் பெறுந”
(அகம்34;374)
எனவும் வரும்.
“தயங்கிய களிற்றின்மேல் தகைகாண விடுவதோ
... ... ... ...
தாள்வளம் படவென்ற தகைநன்மா மேல்கொண்டு” (கலி.31)
என வருவன தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு
வருங்காற்
பாகற்கே கூறுவனென்றார்.
(காமக்கழித்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய
எதிரும்) காமக்கிழத்தி மனையோளென்றிவர் சொல்லிய ஏமுறு கிளவி
எதிரும் - இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய
வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும்: கூற்று நிகழ்த்தும்.
அவை ‘அருஞ்சுரத்து வருத்தம் உற்றீரே’ எனவும்’ ‘எம்மை மறந்தீரே’ எனவுங் கூறுவனவும் பிறவுமாம்.
“எரிகவர்ந்த துண்ட என்றூழ்
நீளிடை
அரிய ஆயினும் எளிய அன்றே
அவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக்
கடுமான் திண்தேர் கடைஇ
நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே.” (ஐங்குறு.360)
இது வருத்தம் உற்றீரே என்பதற்குக் கூறியது.
“தொடங்குவினை தவிரா அசைவில் நோன்றாள்
கிடந்துயிர் மறுகுவ தாயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த
தாவி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச்
செய்வினைக் ககன்ற காலை யெஃகுற்று
இருவே றாகிய தெரிதகு வனப்பின்
மாவி னறுவடி போலக் காண்டொறும்
மேவல் தண்டா மகிழ் நோக் குண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யானெனைத் தேற்றிப் பன்மாண்
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்மெனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்னகை யழுங்க
வினவ லானாப் புனையிழை கேளினி
வெம்மை தண்டா எரியுகு பறந்தலைக்
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி
|