|
ழுகுதற்கண்ணும்: அறியுமாகலின் அன்புசெய்து
ஒழுகுமெனக் கூட்டுக.
என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்பதூஉம் அவர்களும் இது கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு.
உ-ம்:
“நின்ற சொல்லர் நீடு தோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.”
(நற்.1)
இதனுள், தாமரைத்தாதையும் ஊதிச்
சந்தனத்தாதையும் ஊதி வைத்த தேன்போலப் புரைய என்றதனான் ஏற்றற்கண் தலைவி கூறினாள். பிரிவறியலரென்றதும் அன்னதொரு குணக்குறையில ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம்.
“நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”
(குறுந்.3)
இது, நிறுத்தற்கட் கூறியது.
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங்காலம் பெரிதாகலின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்தவிடத்தும்:
உ-ம்:
“காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு
|