|
உ-ம்:
“அகன்றுறை யணிபெற”
என்னும் மருதக்கலி (73) யுள்
“நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன்
ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந்
திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்”
என்பனகூறி,
“மண்டுநீ ராரா மலிகடல் போலுநின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனின்
தோலாமோ நின்பொய் மருண்டு”
(கலி.73)
எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க.
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன்
செல்லா னென்பது இடமுங் காலமும்பற்றி
அறிந்தகாலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பொறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்று தற்கண்ணும்:
உ-ம்:
“புள்ளிமி ழகல்வயல்”
என்னும் மருதக்கலியுள்,
“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயிற் சென்றி அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து.”
(கலி.79)
எனவும்,
“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முது பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்
றுறையிறந்து ஒளிருந் தாழிருங் கூந்தல்
பிறளும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை யயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழிய ரெந்தை செறுநர்
களிறுடை யருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவெம்
ஒண்டொடி நெகிழினும்
|