நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2633
Zoom In NormalZoom Out


 

நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ.”      (அகம்.46)

எனவும் வரும்.

காமக்கிழத்தி    தன்மகத்   தழீஇ   ஏமுறு விளையாட்டு  இறுதிக்
கண்ணும் -  மனையறத்திற்கு  உரியளாக  வரைந்து  கொண்ட  காமக்
கிழத்தி,  தலைவி  புதல்வன்  மனைப்புறத்து  விளையாடுகின்றவனைத்
தழுவிக்கொண்டு   தான்   ஏமுறுதற்குக்  காரணமான  விளையாட்டின்
முடிவின் கண்ணும்:

அவள்   எம்மைப்  பாதுகாப்பீரோவென   வினாயவழி  அவனும்
அதற்கு  உடன்பட்டான்போலக்   கூறுவன   உளவாதலின்   ‘ஏமுறு
விளையாட்டு’  என்றார்.   ‘இறுதி’  யென்றார்  விளையாட்டு  முடியுந்
துணையுந் தான் மறையநின்று பின்னர்க் கூறுதலின்.

உ-ம்:

“நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற்று அரிவை குறுகினள் யாவருங்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்டாங்கு இளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைஇச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
நீயுந் தாயை யிவற்கென யான்தற்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணினேன் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கருங் கடவுள் அன் னோள்நின்
மகன்தாய் ஆதல் புரைவதாங் கெனவே.”      (அகம்.16)

என வரும்.

(சிறந்த   செய்கை  அவ்வழித்  தோன்றி  அறம்புரி  உள்ளமொடு
தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்)
சிறந்த   செய்கை   அவ்வழித்தோன்றி  -  காமக்கிழத்தியது ஏமுறும்
விளையாட்டுப்    போலாது   தலைவி   தன்   புதல்வனைத்  தழீஇ
விளையாட்டையுடைய