நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2641
Zoom In NormalZoom Out


 

தவ ரில்லொழிய எம்போலக்
கையா றுடையவர் இல்லல்லால் செல்லல்
அமைந்த தினிநின் றொழில்.”                (கலி.82)

இது காதற்பரத்தையற்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது.

அவன்வயிற் பிரிப்பினும் - தன்னொடு  மைந்தனிடை  உறவு நீக்கி
அவனைத் தலைவனொடு சாத்துதற் கண்ணும்.

என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்.

உ-ம்:

“மைபடுசென்னி” என்னும் மருதக்கலியுள்,

“மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்;
ஆயினாயிழாய், தாவாத எற்குத் தவறுண்டோ காவாதீங்
கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங்
கன்றி அதனைக் கடியவுங் கைந்நீவிக்
குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா
அன்பிலி பெற்ற மகன்.”                     (கலி.86)

என்புழி “அறனில்லா அன்பிலி பெற்ற மகன்” எனவும், “நின்மகன்
றாயாதல் புரைவதா லெனவே” (அகம்.16) என்புழி “நின்மகன்” எனவும்
பிரித்தவாறு காண்க.

இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும்  -  இன்னாங்குப் பயக்குஞ்
சூளுறவினைத் தலைவன் சூளுறுவலெனக் கூறுமிடத்தும்:

தலைவன்  ‘வந்தகுற்றம் வழிகெட’  ஒழுகிக்,  களவிற் சூளுற வான்
வந்த   ஏதம்   நீக்கி,  இக்காலத்துக்  கடவுளரையும்  புதல்வனையுஞ்
சூளுறுதலின்    ‘இன்னாத   சூள்’   என்றார்.   அது   களவுபோலச்
சூளுறுதலின் ‘தொல்சூள்’ என்றார்.

உ-ம்:

“ஒருஉக் கொடியிய னல்லார்” என்னும் மருதக்கலியுள்,

“வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை
தேற்றக்கண் டீயாய் தெளிக்கு:
இனித் தேற்றேம்யாம்,
தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி
நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் வி