|
பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு
விரும்புதலுமாகிய நிலையின்கண்ணும்; ஆவயின் வரூஉம் நிலையினும் - அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின்கண்ணும்; பல்வேறு நிலையினும் - இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பலவேறுபட்டு
வரும்
நிலையின்கண்ணும்:
அவன் வயினென்னாது ‘ஆவயி’ னென்றார், தோழியும் பொரு ளென்பதுபற்றி.
உ-ம்:
“இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்ன ரென்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாற்பெய் பைம்பயிர் ஆரும்ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.”
(குறுந்.181)
இது தோழி இன்னாக்கிளவி கூறியதனை இதுபொழுது கூறிப் பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள்.
“பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்
டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச்
சேறு நாமெனச் சொல்லச் சேயிழை
நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்
ககல்வ ராடவ ரதுவதன் பண்பே.”
(நற்.24)
இது செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது.
“வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.”
(குறுந்.21)
இது கானங் காரெனக் கூறவும் வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது.
“யா
|