|
ன்
கூம்புநிலை யன்ன முகைய வாம்பல்
தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழுந்
தண்டுறை யூரன் தண்டாப் பரத்தமை
புலவா யென்றி தோழி புலவேன்
பழன யாமைப் பாசறைப் புறத்துக்
கழனி காவலர் சுடுநந் துடைக்குந்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூ ரன்னவென்
நன்மனை நனிவிருந் தயருங்
கைதூ வின்மையி னெய்தா மாறே.”
(நற்.280)
இந் நற்றிணை தலைவனொடு புலவாமை
நினக்கு இயல்போ
வென்ற தோழிக்கு விருந்தாற் கைதூவாமையின்
அவனை
எதிர்ப்படப் பெற்றிலேனல்லது புலவேனோ எ-று.
“அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.”
(குறுந்.33)
இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது.
“காண்மதி பாணநீ யுரைத்தற்குரியை
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே.”
(ஐங்குறு.140)
இது, பரத்தையிற் பிரிந்துழி வன் நின் வார்த்தையே கேட்ப னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது.
“ஆடியல் விழவி னழுங்கன் மூதிர்
உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா
அறனில் புலத்தி யெல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர வோடிப்
பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற்
பூங்க ணாயம் ஊக்க வூங்காள்
அழுதனள் பெயரு மஞ்சி லோதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்
பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே.”
(நற்.90)
இது பாண
|