நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2650
Zoom In NormalZoom Out


 

னைக் குறித்துக் கூறியது.

“நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு
மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றுந்
தேரோற் கொத்தனெ மல்லே மதனாற்
பொன்புரை நரம்பி னின்குரற் சீறியாழ்
எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல்
கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப்
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்
புரவியும் பூணிலை முனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே.”    (நற்.380)

இது பாணனுக்கு வாயின் மறுத்தது.

“புல்லேன் மகிழ்ந புலத்தலு மிலனே
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக்
காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை
யள்ளலங் கழனி யுள்வா யோடிப்
பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப்
பைங்காற் செறுவி னணைமுதற் புரளும்
வாணன் சிறுகுடி யன்னவென்
கோனே ரெல்வளை ஞெகிழ்த்த நும்மே.”      (நற்.340)

இது, ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தலைவி கூறியது.

“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்குந்
தண்கடற் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனனெங் காத லோனே.”        (ஐங்குறு.157)

இது,  வாயில்   வேண்டி   ஒழுகுகின்றான்  புதல்வன்  வாயிலாக
வருமெனக்  கேட்டு  அஞ்சிய  தலைவி அவன் விளையாடித் தனித்து
வந்துழிக் கூறியது.

“கூன்முண் முள்ளி” என்னும் (26) அகப்பாட்டு ஆற்றா