நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2651
Zoom In NormalZoom Out


 

மை வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூறியவாறு.

‘மாறாப்  புண்போன்  மாற்றச்  சீற்றங்  கனற்றப்’ பின்னும்  புலவி
கூர்ந்து   தலைவன்   கேட்ப   முன்னிலைப்   புறமொழியாக  யான்
நோமென்னவும் ஒல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க.

“பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி”       (கலி.79)

எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க.

“நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளூரவர்
ஆடைகொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ
கூடியார் புனலாடப் புணையாய மார்பினில்
ஊடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை.”      (கலி.72)

இஃது, ஆடை கழுவுவாளை வாயிலென்றது.

பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க.

கிழவோள்   செப்பல்   கிழவது  என்ப  -  இப்பத்  தொன்பதுங்
கிழவோனுக்கு  உரிமையுடைத்தென்று  கூறுவர்  ஆசிரியர், என்றவாறு.
முன்னர்  நின்ற  ஏழனுருபுகளைத்  தொகுத்து  இன்னதன்  கண்ணும்
இன்னதன்கண்ணுந்   தலைவி  செப்புதலை  வாயிலின்  வகையோடே
கூட்டிக்  கிழவோள் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ
என மாறுக.
                                              (6)

தலைவி கூற்றின்கட்படுவதோரிலக்கணமுணர்த்தல்

148. புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்
திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்வினைக் கச்சமாகும்.

இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)  புணர்ந்து  உடன்  போகிய கிழவோள் மனை இருந்து -
களவுக்  காலத்துப்  புணர்ந்து  உடன் போகிய தலைவி கற்புக்காலத்து
இல்லின்கண்   இருந்து;   இடைச்சுரத்து   இறைச்சியும்  அன்புறுதக்க
வினையுஞ்  சுட்டிக்  கிளத்தல்  தானே  -  தான் போகிய  காலத்துக்
காட்டின்கட் கண்ட கருப்பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு
செய்தற்குத்தக்க     கருப்பொருளின்    தொழில்களையும்    கருதிக்
கூறுதல்தானே; கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும் - தலைவன்
எடுத்துக்கொண்ட  காரியத்திற்கு முடித்தலாற்றான்கொலென்று அஞ்சும்
அச்சமாம் எ-று.

எனவே, அரு