|
விறலிய ரென்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலை யெதிர் நின்று சாற்றிய
மரபுடை யெதிரு முளப்படப் பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந்
தோழிக் குரிய வென்மனார் புலவர்.
இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது.
(இ-ள்.) (பெறற்கு அரும்
பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின்கண்ணும்) பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த - தலைவனுந் தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச் சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய; தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் - தனது தெறுதற்கரிய மரபுகாரணத்தான்
தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தோழி கூற்று நிகழும்.
தலைவியையுந் தலைவனையும் வழிபாடாற்றுதலின்
‘தெறற்கரு மரபின்’ என்றார். தெறுதல் - அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ ஆற்றுவித்தலின்
எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அவை எம்பெருமானே அரிதாற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளான் இவள் ஆற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோவென்றானுங் கூறுவனவாம்.
“அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடாள்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்
கரியே மாகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.”
(குறுந்.178)
இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீ
|