நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2662
Zoom In NormalZoom Out


 

காலை
நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே.”      (அகம்.286)

இதனுள்     ‘அற’னென்றது இல்லறத்தை; ‘தற்றகவுடைமை நோக்கி’
யென்றது  தன்னான்  அவ்வறனும்  பொருளுந் தகுதிப்  பாடுடையவாந்
தன்மையைநோக்கி      என்றவாறாம்;      ‘முன்னிய’      தென்றது
புறத்தொழுக்கத்தை;  ‘பெரியோரொழுக்கமனைய’  வென்றது  பரியோர்
ஒழுக்கம் பெரிய வென்றவாறு.

இது     முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி  நும்மனோர்  மாட்டும்
இன்ன  பொய்ச்சூள்  பிறக்குமாயின்  இவ்வுலகத்து  மெய்ச்சூள்   இனி
இன்றாம்.  அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத்  தேருங்காலை
அறியவாயிருந்தனவெனத்   தலைவனை   நோக்கித்  தோழி  கூறலின்
அவனை   வழிபாடு   தப்பினாளாயிற்று.   உள்ளுறையுவமம்   இதற்கு
ஏற்குமா றுணர்க.

அவ் வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால்
நின்று  கெடுத்தற்கண்ணும்  -  தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த  இடத்து
அவன்   சென்று   சேருந்  தகைமை  இல்லாமைக்குக்   காரணமாகிய
புலவியின்கண்   அழுந்திய    தலைவிபக்கத்தாளாய்   நின்று  அவள்
புலவியைத் தீர்த்தற்கண்ணும்:

உ-ம்:

“மானோக்கி நீயழ நீத்தவ னானாது
நாணில னாயி னலிதந் தவன்வயின்
ஊடுத லென்னோ வினி.”                     (கலி.87)

“உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.”                   (குறள்.130-2)

“காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் மரீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.”       (குறுந்.45)

(உணர்ப்புவயின்   வாரா   ஊடல்   உற்றோள்வயின்  உணர்த்தல்
வேண்டிய கிழவோன்பால்