|
கையதை
செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன்
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
அவவுக்கொள் மனத்தே மாகிய நமக்கே.” (நற்.212)
இது தலைவிக்கு வரவுமலிந்தது.
“நீலத் தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலந்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தேர் உழவர் இன்குர லியம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்
திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன்
வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர்
ஈர்ம்புறவு இயங்குவழி யறுப்பத் தீந்தொடைப்
பையு ணல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரா ராயின் தந்நிலை
எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச்
செய்வினை யழிந்த மைய னெஞ்சின்
துனிகொள் பருவரல் தீர வந்தோய்
இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பொருந்திதழ் கமழும் விரிந்தொலி கதுப்பின்
இன்னகை யிளையோள் கவவ
மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே.” (அகம்.314)
இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது.
“மடவ மன்ற தடவுநிலைக்கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே”. (குறுந்.66)
இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.
“எனநீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்று அவர் வாய்மொழித் தூதே.” (கலி.26)
இது, தூதுவந்தமை தலைவிக்குக்
|