|
பாட்டும் உடையராகிவருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவலபாங்கினரும் பிறருமாம். இனிக் காமக்கிழத்தியரைப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து கொள்ளும் பரத்தையருமென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார்: என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ்செய்யின் மயங்கக்கூறலென்னுங் குற்றந் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றோர் பலருங் காமக்கிழத்தியரைப் பரத்தையராகத் தோற்றுவாய்செய்து கூறுமாறும் உணர்க.
(இ-ள்.)
புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும் இடைவிட்டு மயக்குதலான் தலைவிக்கண் தோன்றிய புலவியிடத்தும்; காமக்கிழத்தியர் புலந்து கூறுப.
உ-ம்:
“மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
தண்டுறை யூரனெஞ் சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை
அவைபுகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
வகையமை பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென
ஆதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும்
அந்தண் காவிரி போலக்
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே.” (அகம்.76)
இதனுள் எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென முன்னைஞான்று புல்லுதன் மயக்குதலான் தலைவி புலந்தவாறும் அதுகண்டு காமக்கிழத்தி கொண்டு கைவலிப்பலெனப் பெருமிதம் உரைத்தவாறுங் காண்க.
இது, பெரு
|