நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2671
Zoom In NormalZoom Out


 

தந்தைகா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும்
மருப்புப் பூண் கையுறை யாக அணிந்து
பெருமா நகைமுகங் காட்டென்பாள் கண்ணீர்
சொரிமுத்தங் காழ்சோர்வ போன்ற.”             (கலி.82)

இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது.

“மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளும்
மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே
நினைக்கியாம் யாரே மாகுது மென்று
வனப்புறக் கொள்வன நாடி யணிந்தனள்.”         (கலி.82)

இதனுள்  நோய்  தாங்கினளென  இளமைப்பருவத்து   மகிழ்ச்சியும்
முதிர்ந்த   பருவத்து   மறவியுந்  தோன்றக்  கூறாமையினானும்   வழி
முறைத்தா யென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று.

“அவட்கினி தாகி விடுத்தனன் போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்
புலத்தகைப் புத்தேளில் புக்கான்.”               (கலி.82)

என்றவழிப் ‘புத்தே’ளென்றது  தலைநின்றொழுகும்  இளையோளைக்
கூறியது.

“தந்தை யிறைத்தொடி மற்றிவன் றன்கைக்கண்
தந்தாரியா ரெல்லாஅ விது
இஃதொன்று.”                               (கலி.84)

என்றாற்போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க.

(மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய
பருவரற்கண்ணும்)   மறையின்   வந்த   -   தலைவற்கு   வேறொரு
தலைவியொடு   களவொழுக்கம்   நிகழ்தலின்   அவன்  செய்திகளின்
வேறுபாட்டான்  தமக்குப்  புலப்பட வந்த; மனையோள்  செய்வினை -
மனையோளாதற்குரியவள்  தமர்பணித்தலிற் றைந்நீராடலும் ஆறாடலும்
முதலிய  செய்தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று  பெருகிய
பருவரற்கண்ணும்  -  இவள்  தோற்றப்பொலிவான் தலைவன்  கடிதின்
வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின்கண்ணும்:

உ-ம்:

“வாளை வாளிற் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்குங்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த