நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2676
Zoom In NormalZoom Out


 

பிறவாறு வருவனவுங் கொள்க.

“தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப்
பொலம்பூண் நன்னன் புனனாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழி ஆங்கண்
அஞ்ச லென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது
தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்
தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின்
மார்புதரு கல்லாய் பிறனா யினையே
இனியான் விடுக்குவென் அல்லேன் மந்தி
பனிவார் கண்ணள் பலபுலந் துறையக்
கடுந்திறல் அத்தி ஆடணி நசைஇ
நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின்
மனையோள் வௌவலும் அஞ்சுவல் சினைஇ
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே.”      (அகம்.396)

இது காமக்கிழத்தி என்னலந் தாவென்றது.

“உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல கன்ன
குண்டுநீ ராம்பல் தண்டுறை யூரன்
தேங்கம ழைம்பால் பற்றி யென்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல்
சினவிய முகத்துச் சினவாது சென்றுநின்
மனையோட் குரைப்பல் என்றலின் முனையூர்ப்
பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யுந்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணி னதிரும்
நன்ன ராள னடுங்கஞர் நிலையே.”              (நற்.100)

இது, மனையோ