நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2683
Zoom In NormalZoom Out


 

றவாறு.

எனவே, கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலும் உரியவென்றார்.
புலவியும்   ஊடலுங்  கற்பிற்கே  பெரும்பான்மை  நிகழ்தலிற் கற்பிற்கு
அவை     உரியவென்கின்றார்,   அவை   களவிற்குஞ்   சிறுபான்மை
உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி.

“எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்.”         (குறுந்.19)

இது கற்பிற் புலந்தது.

“தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்று மெங்கண் மறுத்தரவு இல்லாயின்”     (கலி.81)

என்பது ஊடல். பிற இடத்தும் ஊடுதல் அறிந்து கொள்க.

“கலந்தநோய் கைம்மிகக் கண்படா என்வயின்
புலந்தாயும் நீயாயிற் பொய்யானே வெல்குவை.”   (கலி.46.)

என்பது குறிபிழைத்துழிப் புலந்தது.

“குணகடற் றிரையது பறைதபு நாரை.”          (குறுந்.128)

என்பதனுள்     நாரை   தெய்வங்   காக்கும்  அயிரை  இரையை
வேட்டாற்போல்  நமக்கரியளாயினாளை  நீ வேட்டா யென்பதனாற் குறி
பிழைத்துழி   ஊடினமை   கூறிற்று.    பிறவும்   இவ்வாறு   வருவன
உய்த்துணர்ந்து கொள்க.                                    (15)

தவைன் புலகுமிடத்துத் தோழிகூற்று நிகழ்த்துமெனல்

157. புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்துஞ்
சொலத்தகு கிளவி தோழிக் குரிய

இது,  முன்னர்த்,    தலைவன்   புலக்குமென்றார்,   அவ்விடத்துந்
தோழியே கூற்றுநிகழ்த்துதற்கு உரியளென்கிறது.

(இ-ள்.)   புலத்தலும்  ஊடலும்  ஆகிய  இடத்தும்  -   தலைவன்
தலைவியையுந்   தோழியையும்  அச்சுறுத்தற்  செய்கையாகச்   செய்து
கொண்டு  புலத்தலும்  அது  நீட்டித்து  ஊடலும்  உடன்   நிகழ்த்திய
வழியும்;   சொலத்தகு   கிளவி  தோழிக்கு  உரிய  -  சொல்லத்தகும்
பணிமொழி தோழிக்கு உரிய எ-று.

எனவே,  தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே
கூறப்பெறாளென்றவாறு.  எனவே  பாடாண்டிணைக்  கைக்கிளையாயின்
தலைவி கூறவும் பெறுமென்று