|
யினன்” என அவன் வருந்தியது ஏதுவாகத் தான் ‘மண்போன் ஞெகிழ்ந்தே’னென அருண் முந்துறுத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உளவென அன்பு பொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சறை போகிய அறிவினேற் கெனத்தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க. (20)
தலைவியுந் தோழியு மலரெழுகின்றதெனக் கூறற்கு முரியரெனல்
162. களவும் கற்பும் அலர்வரை வின்றே.
இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக்
கூறுகின்றது.
(இ-ள்.)
களவின்கண்ணுங் கற்பின்கண்ணும் அலரெழுகின்றதென்று கூறுதல் தலைவிக்குந் தோழிக்கும் நீக்குநிலைமையின்று எ-று.
வரைவின்றெனப் பொதுப்படக் கூறினமையான் இருவரையுங் கொண்டாம். தலைவன் ஆங்குக் கூறுவனாயிற் களவிற் கூட்டமின்மையுங் கற்பிற் பிரிவின்மையும் பிறக்கும்.
‘ஒப்பக்கூற’ (666) லென்னும் உத்திபற்றிக் களவும் உடனோதினார் சூத்திரஞ் சுருங்குதற்கு.
‘களவலராயினும்’ (தொல்.கள.24) எனவும், ‘அம்பலு மலரும்’
(தொல்.கள.48) எனவுங் களவிற் கூறியவை அலராய் நிகழ்ந்தவழி வேறுசில பொருண்மை பற்றிக் கூறுதற்கு வந்தன. அவை அலர்கூறப் பெறுப என்றற்கு வந்தன வல்லன உணர்க.
உ-ம்:
“கண்டது மன்னு மொருநாள் அலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.” (குறள்.1146)
இது களவு.
“வேதின வெரிநி னோதி முதுபோத்
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்துஞ்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்
தீங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் அழுங்கல் ஊரே.” (குறுந்.140)
இது கற்பு.
“கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிறுந்
தேர்வண் கோமான் தேனூர அன்னஇவள்
நல்லணி
|