நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2693
Zoom In NormalZoom Out


 

அதற்கேற்பக்   கழிகாமத்தாற்   கெட்டாரை  எடுத்துக்  காட்டலும்;
அணிநிலை   உரைத்தலும்  -  முலையினுந்  தோளினும்   முகத்தனும்
எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித் தெழுதுமாறு இதுவெனக் கூறலும்;
கூததர் மேன - இவ்வெட்டுங் கூத்தரிடத்தன. எ-று.

கூத்தர்,     நாடகசாலையர்,    தொன்றுபட்ட    நன்றுந்   தீதுங்
கற்றறிந்தவற்றை  அவைக்கெல்லாம்   அறியக்காட்டுதற்கு  உரியராகலிற்
கூத்தர் இவையும் கூறுபவென்றார்.  இலக்கியம் இக்காலத் திறந்தன.

“பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.”                     (குறள்.914)

இஃது, அறிவுமெய்ந்நிறுத்தது.                            (27)

கூத்தர்க்கும் பாணர்க்குமுரிய கிளவிகூறல்

169. நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை உரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய.

இஃது,   அதிகாரப்பட்ட   கூத்தரொடு  பாணர்க்கும்   உரியதோர்
இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.)     நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை   உரைத்தல் -
தலைவன்  சேட்புலத்துப்  பிரிந்துறைதலைத்  தலைவிக்காக   வரைந்து
மீளும்  நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை  உரிய
- கூத்தர்க்கும் பாணர்க்கும் யாப்பமைந்தன உரிய எ-று.

யாப்பமைதலாவது,    தோழியைப்போலச்   செலவழுங்   குவித்தல்
முதலியன   பெறாராகலின்,  யாழெழீஇக்  கடவுள்  வாழ்த்தி  அவளது
ஆற்றாமை  தோன்றும் வகையான் எண்வகைக் குறிப்பும்பட  நன்னயப்
படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன.

உ-ம்:

“அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன்மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய
அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்
திரிமருப் பிரலை புல்லருந் துகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கி னறும்பூ வ