|
யரப்
பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்
வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு
மாலையு முள்ளா ராயிற் காலை
யாங்கா குவங்கொல் பாண வென்ற
மனையோள் சொல்லெதிர் சொல்லை செல்லேன்
செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத்
தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே
விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக்
கல்பொரு திரங்கும்பல்லார் நேமிக்
கார்மழை முழக்கிசை கடுக்கும்
முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.” (அகம்.14)
இதனுள், தலைவி இரக்கந்தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர் மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க.
கூந்தர் கூற்று வந்துழிக் காண்க. (28)
இளையோர்க்குரிய கிளவி இதுவெனல்
170. ஆற்றது பண்புங் கருமத்து விளைவும்
ஏவல் முடிவும் வினாவுஞ் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க் குரிய கிளவி யென்ப.
இஃது, உழைக்குறுந்தொழிற்குங் காப்பிற்கும் (தொல்.பொ.171) உரியாராகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலராகிய இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும்; கருமத்து விளைவும் - ஒன்றாகச் சென்றுவந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுதலும்; ஏவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும்; வினாவும் - தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும்; செப்பும் - தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காக வாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறிவு கூறுதலும்; ஆற்றிடைக் கண்ட பொருளும் - செல்சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவர்க்குந் தலை
|