நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2695
Zoom In NormalZoom Out


 

விக்கும்    உறுதிபயக்குமாறு கூறலும்; இறைச்சியும் - ஆண்டுமாவும்
புள்ளும்   புணர்ந்து   விளையாடுவனவற்றை  அவ்விருவர்க்குமாயினுந்
தலைவற்கே  யாயினுங்   காட்டியும்  ஊறு  செய்யுங்  கோண்மாக்களை
அகற்றியுங்  கூறுவனவும்;   தோற்றஞ்  சான்ற  அன்னவை  பிறவும் -
அங்ஙனம்  அவற்குத்   தோற்றுவித்தற்கமைந்த  அவைபோல்வன  பிற
கூற்றுக்களும்;   இளையோர்க்கு  உரிய கிளவி என்ப - இளையோர்க்கு
உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

தலைவியது செய்தி அறிந்துவந்து  கூறுவனவும் பிற பொருளுணர்ந்து
வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும். ஏவன் முடிவிற்கும்

இஃதொக்கும்.    ‘சான்ற’ வென்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால்
இது    பொழுது    இவ்வழிச்சேறல்    அமையாதென    விலக்கலுங்
கருமங்கூறுங்காற்  சந்துசெய்தல்  அமையுமெனக் கூறுதலும்  போல்வன
அமையாவாம்,   அவர்   அவை  கூறப்பெறா  ராகலின்.   பிறவாவன,
தலைவன்  வருவனெனத்  தலைவி மாட்டுத் தூதாய்வருதலும்,  அறிந்து
சென்ற  தலைவற்குத்  தலைவி  நிலை கூறுதலும், மீளுங்கால்  விருந்து
பெறுகுவள்   கொல்லெனத்   தலைவி  நிலையுரைத்தலும்  போல்வன.
இலக்கியம் வந்துழிக் காண்க.

உ-ம்:

“விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை
தளிரியற் கிள்ளை யினிதி னெடுத்த
வளராப் பிளிளைத் தூவி யன்ன
வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற்
பறைக்கண் ணன்ன நிறைச்சுனை தோறுந்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்