நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2703
Zoom In NormalZoom Out


 

கழ்தல்     பெற்றாம்.    அவை    காமக்கிழத்தியரும்    அவர்க்குப்
பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம்.

உ-ம்:

“பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும்
என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி குநளே.”

எனப் பதிற்றுப்பத்தில் வந்தது.                           (39)

தலைவன் தன்னைப் புகழுிமிட மிதுவெனல்

181. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப.

இது,  தலைவன்  தன்னைப்   புகழ்ந்துரைக்கும்   இடம்  இன்னுழி
என்கின்றது.

(இ-ள்.)    கிழவி முன்னர்க்  கிழவோன் தற்புகழ் கிளவி - தலைவி
முன்னர்த்  தலைவன்  தன்னைப்  புகழ்ந்து கூறுங்கூற்று;  வினைவயின்
உரிய  என்ப - காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று
கூறுவார் ஆசிரியர் எ-று.

அக்காரணமாவன,      கல்வியுங்,  கொடையும், பொருள் செயலும்,
முற்றகப்பட்டோனை       முற்றுவிடுத்தலுமாகிய         காரியகளை
நிகழ்த்துவலெனக்   கூறுவன.   இவ்  வாள்வினைச்   சிறப்பை  யான்
எய்துவலெனத்  தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி  பிரிவாற்றுதல்
பயனாயிற்று.

“இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென”  (கலி.2)

என்றவழி   யான்   இளிவரவு  எய்தேனென்றலிற்  புகழுக்குரியேன்
யானெக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க.       (40)

பாங்கற்கு எய்திய தொருமருங்கு மறுத்தல்

182. மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.

இது, மேற் பார்ப்பார்க்குரியன  பாங்கற்குமா மென எய்துவித்ததனை
ஒருமருங்கு மறுக்கின்றது.

(இ-ள்.)   மொழியெதிர்     மொழிதல்  -  பார்ப்பானைப் போலக்
காமநிலை உரைத்தல் போல்வன  கூறுங்கால் தலைவன் கூறியமொழிக்கு
எதிர் கூறுதல்; பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரித்து எ-று.

இது  களவிற்கும் பொது:  அது  பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற்
புறத்தொழுக்