|
கத்துத் தலைவன் புகாமற் கூறுவன வந்துழிக் காண்க. ‘உரித்’ தென்றதனான் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க. (41)
இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறல்
183. குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.
இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
குறித்து எதி்ர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல், அஃகித் தான்றும் - சுருங்கித் தோன்றும் எ-று.
அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே ‘காம நிலை
யுரைத்தல்’ (தொல்.பொ.177) என்னுஞ் சூத்திரத்தின்கட் கூறிய ‘ஆவொடு பட்ட நிமித்தம்’ ஆயின் பார்ப்பான் கூறக்கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும் ; ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும் பெறுமெனவுங் கூறியவாறாயிற்று. (42)
தலைவன்வற்புறுத்திப் பிரிவனெனல்
184. துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.
இது முன்னர்க் ‘கிழவிமுன்னர்’ (தொல்.பொ.181) என்பதனாற் குறிப்பினான் ஆற்றுவித்துப் பிரிதல் அதிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக்கூறி வற்புறுத்து மென்கின்றது.
(இ-ள்.)
துன்பு உறு பொழுதினும் - உணர்த்தாது பிரியத் தலைவி துன்பம் மிக்க பொழுதினும் ; உம்மையான் உணர்த்திப் பிரியத் துன்பம் மிகாத பொழுதினும் ; எல்லாம் - சுற்றமுந் தோழியும் ஆயமுந் தலைமகள் குணமாகிய அச்சமும் நாணமும் மடனுமாகியவற்றையெல்லாம் ; கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் எ-று.
எனவே, இவற்றை முன்னர் நிலைபெறுத்திப் பின்னர்ப் பிரியுமாயிற்று. சொல்லாது பிரியுங்கால், ‘போழ்திடைப் படாமன் முயங்கியும்’ அதன்றலைத் ‘தாழ்கதுப் பணிந்து முளைஎயி்ற் றமிழ்தூறும்ம தீ நீரைக் கள்ளினு
|