நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2709
Zoom In NormalZoom Out


 

நிகழ்த்தினார்   துறவறம்   நிகழ்த்துங்   கருத்தினராக  வேண்டுதலின்
காலவரையறை   கூறாராயினார்.   முன்னர்க்   காட்டிய   “அரம்போ
ழவ்வளை”(அகம்.125)
என்னும்பாட்டினுட் ‘பானாட் கங்குலின்  முனிய
வலைத்தி  -  கடவுள்  சான்ற செய்வினை  மருங்கிற்  -   சென்றோர்
வல்வரின்  ஓடுவை’  என்றது,  இராப்பொழுது  அகலாது நீட்டித்ததற்கு
ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க.                       (47)

பகைவயிற்பிரிவிற்குக் காலவரையறை இதுவெனல்

189. வேந்துறு தொழிலே யாண்டினதகமே.

இது,  வரையறையுடைமையிற்  பகைவயிற்   பிரிவிற்கு   வரையறை
கூறுகின்றது.

(இ-ள்.)   வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்தருறும் பிரிவும்,
அவருள்  ஒருவற்காக  மற்றொரு  வேந்தனுறும் பிரிவும் ;  யாண்டினது
அகமே - ஓர் யாண்டினுட்பட்டதாம் எ-று.

‘வேந்துறுதொழி’    லென்பதனை இரட்டுற  மொழிதலென்பதனான்
வேந்தனுக்கு  மண்டிலமாக்களுந்  தண்டத்தலைவரு முதலியோர் உறும்
பிரிவும்  யாண்டின  தகமெனவும்  பொருளுரைக்க.  ’தொழி’ லென்றது
அதிகாரத்தாற்   பிரிந்து   மீளும்   எல்லையை.  அது, ‘நடுவுநிலைத்
திணையே  நண்பகல்  வேனிலொடு’  (தொல்.அகத்.9)
என்பதனாற்
பிரிவிற்கோதிய  இருவகைக்  காலத்துள்ளும்  முதற் கணின்ற சித்திரை
தொடங்கித்   தையீறாகக்   கிடந்த   பத்துத்   திங்களுமாம்.   இனிப்
பத்தென்னாது யாண்டென்றதனாற், ‘பின்பனிதானும்’ (தொல்.அகத்.10)
என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்  கணின்ற
சித்திரை  தொடங்கித் தையீறாகக் கிடந்த பத்துத் திங்களுமாம்.  இனிப்
பத்தென்னாது யாண்டென்றதனாற், ‘பின்பனிதானும்’ (தொல்.அகத்.10)
என்பதனாற்  கொண்ட  சிறப்பில்லாத பின்பனிக்குரிய  மாசிதொடங்கித்
தையீறாக  யாண்டு  முழுவதூஉங்  கொள்ளக்  கிடந்ததேனும் அதுவும்
பன்னிரு  திங்களுங்  கழிந்த தன்மையின் யாண்டினதகமாமா  றுணர்க.
இதற்கு இழிந்த எல்லை வரைவின்மையிற் கூறாராயினார் : அது,

“இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி யருவி